Advertisment

அரசு மருத்துவமனை கரோனா வார்டுக்கு 11 பெடரல் மின்விசிறி வழங்கிய  வர்த்தக சங்கத்தினர்..!

Businessmen donate 11 fans to Government Hospital Corona Ward ..!

Advertisment

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு சரியான காற்று வசதி இல்லாததால் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோக் பாஸ்கர், சிதம்பரம் சார் ஆட்சியரிடம் கூறினார். பின்னர் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட வர்த்தக சங்கத்தினரிடம் இதுகுறித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில் சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் 11 பெடரல் மின்விசிறி மற்றும் அதற்கான எக்ஸ்டென்சன் பாக்ஸ்களை வழங்கி நோயாளிகளுக்கு உதவி செய்தனர். மின்விசிறிகளை மருத்துவமனை மருத்துவரிடம் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் மற்றும் சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Government Hospital Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe