Businessman who donated oxygen worth Rs 20 lakh ..!

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கப்பட்டது.'சிங்கப்பூர் சாஃப்ட்வேர்' நிறுவனத்தை நடத்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த திலீப் பாபு என்பவர் இருபது லட்ச ரூபாய் மதிப்பிலான 23 ஆக்சிஜன் செரிவூட்டிகளைதிண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கினார்.

Advertisment

இதனை அரசு மருத்துவமனை சுகாதார துணை இயக்குநர் சுரேஷ் பாபு பெற்றுக்கொண்டார். சிங்கப்பூரில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்திவரும் பாபு, கரோனா தொற்றுநோய் ஒழிப்புக்காக தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் அளித்துள்ளார்.திண்டுக்கல் மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக 23 ஆக்சிசன்செரிவூட்டிகளை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment