/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3152.jpg)
சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் உடல் பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு சாலை ஓரமாக வீசப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றம் சின்மயா நகரில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் ஏதோ ஒன்று கருப்பு பைகளில் கட்டப்பட்டு மிதப்பதாகத் துப்புரவுத் தொழிலாளர்கள் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த காவலர்கள் பைகளில் கட்டப்பட்டு வாய்களில் துணிவைத்து கட்டி இருந்தது தொழிலதிபரின் சடலம் என கண்டுபிடித்தனர். கொலை செய்யப்பட்டவர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயதான பாஸ்கர் என்பதும் தன்னுடைய மகனுடன் இணைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
பாஸ்கரின் செல்போன் என்னை நேற்று முதல் தொடர்பு கொள்ள முடியாததால் அவரை காணவில்லை என அவரது மகன் கார்த்திக் நேற்று இரவு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் விசாரித்ததில் நேற்றிரவு பாஸ்கரின் எடிஎம் அட்டையிலிருந்து இரு முறை 10000 எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. அவரது சடலம் இருந்த இடத்திற்கு அருகே அவரது காரும் இருந்தது கண்டெடுக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)