Businessman abduction! Friends arrested!

Advertisment

திருச்சி தில்லைநகர் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் கார்த்திக்குமார்(36). இவர், தன்னுடைய தொழில் நிமித்தமாக தனது நண்பர் தங்கதுரையிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால், கார்த்திக்குமார் திருப்பி தராமல் காலம் தாழ்த்தியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை கார்த்திக்குமார், தன்னுடைய மகளை காரில் அழைத்துக் கொண்டு லால்குடியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு, திரும்பி வந்துள்ளார். அப்போது காரை வழிமறித்த தங்கதுரை மற்றும் அவர்களது நண்பர்களான ஆறுமுகம், வினோத் பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து, கார்த்திக்குமாரிடம் பணத்தை எப்போது கிடைக்கும் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும், கார்த்திக்குமார் ஓட்டிவந்த காரிலேயே அவரை கடத்தி சென்றனர்.

இது குறித்து கார்த்திக்குமார் மனைவி தேவிபாலா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இதில், அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் கார்த்திக்கார் நிற்பதாக தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு விரைந்து காருடன் கார்த்திக்குமாரை மீட்டனர். மேலும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தங்கதுரை மற்றும் ஆறுமுகம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.