Advertisment

'தமிழர்களை தவிர்த்து டபுள் ஏஜெண்டுகளை வளர்க்கும் எடப்பாடி அரசு' - குமுறும் தொழிலதிபர்கள்

Tamil Nadu

வெளிநாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களைத் தமிழகத்துக்கு ஈர்க்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு. இதற்காக, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழுவும் அமைத்துள்ளார் எடப்பாடி.

Advertisment

இந்த நிலையில், "தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் அனுபவம் உள்ள தமிழர்களைப் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு தவறுகிறது" என்கிறார்கள் தமிழக தொழில் முனைவோர்கள்.

Advertisment

இது குறித்து தமிழக தொழில்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிறுவனம் 43 நாடுகளில் பயிற்சி அளித்து தொழிலதிபர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளது. தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு அவரது தொடர்புகளையும் அனுபவத்தையும் எடப்பாடி அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் சிவ்நாடார். தமிழரான இவருடைய அனுபவங்களையும் தொடர்புகளையும் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், பயன்படுத்திக்கொள்ள தவறி வருகிறது. இவர்களை பயன்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை எளிதில் ஈர்க்க முடியும்" என்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவினரை வளைக்க , வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்காக செயல்படும் டபுள் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் கோட்டையில் அதிகரித்துள்ளதாக ஆதங்கப்படுகின்றனர் தொழில்துறையினர்.

Tamilnadu Organization Business
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe