தொழிலதிபரைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது! 

BUSINESS MAN INCIDENT PUDUKOTTAI DISTRICT POLICE INVESTIGATION

தொழிலதிபரைக் கடத்தி 70 லட்சம் ரூபாயைக் கேட்டு மிரட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சந்திரசேகரன். இவர் வழக்கம் போல், அதிகாலை நடைப்பயிற்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றுவிட்டது. பின்னர், தொழிலதிபரின் மகனைத் தொடர்புக் கொண்ட கடத்தல் கும்பல், 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து மணிகண்டன் உடனடியாக, கீரனூர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடத்தல் கும்பலின் செல்போன் எண்ணை பெற்று, சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். இதனையறிந்த கடத்தல் கும்பல், தொழிலதிபரை திருச்சி அருகே இறக்கிவிட்டு, காரில் தப்ப முயன்ற போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து ஏழு பேரை கைது செய்தனர்.

விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மயில் வாகனனுக்கும், சந்திரசேகரனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் அவரை உடற்பயிற்சிக் கூடம் உரிமையாளர் மூலம் கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.

pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe