
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்தது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலாக இருந்த 'மாண்டஸ்' புயலாக வலுவிழந்து நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்ற ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதே நேரம் ஆம்னி பஸ்கள் இரவில் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.
புயல் கடக்கும் பாதையில் உள்ள கடலோரப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை ஈசிஆர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)