/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus_4.jpg)
கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு மறைவையொட்டி 15க்கும் மேற்பட்ட இடங்களில் 26 பேருந்துகள் உடைக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடையடைப்பும் நடந்தது.
வன்னியர் சங்க தலைவர் குரு நேற்று வெள்ளி இரவு சென்னையில் உயிரிழந்தார். இதனையொடுத்து அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டிகிராமத்துக்கு எடுத்து வந்து பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. குருவின் மறைவையொட்டி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு,பண்ருட்டி உள்ளிட்ட 15க்கும் இடங்களில் 26 அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன. அதில் அரசு பேருந்து 24, தனியார் பேருந்து 2 ஆகும். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடலூர்,பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில்,சேத்தியாதோப்பு, சோழதரம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த அளவு இயங்கியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாமகவினர் குருவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus photo.jpg)
இந்நிலையில் குருவின் உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமை குறைந்தளவு ஓடிய அனைத்து பேருந்துகளையும் நிறுத்திவிட்டனர். இதனால் கிராமபுறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் சிதம்பரம் போன்ற நகரங்களில் இருந்து திருப்பதி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட நெடுந்தூர பகுதிக்கு செல்லும் இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்து இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலே திறந்த வெளியில் காத்துகிடந்தனர். இதில் ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சிகள் அதிகம் உள்ளதால் பல ஊர்களில் இருந்து வந்தவர்கள் பேருந்துகள் இயங்காததால் குழந்தைகளை வைத்துகொண்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு நேர்முக தேர்வுக்கு செல்வர்கள் சிலர் பேருந்து இயங்கவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை அருகில் இரந்தவர்கள் ரயிலில் போக அறிவுரை கூறி அனுப்பினார்கள். இதுபோன்ற சம்பவங்களை பார்பதற்கே மிகவும் வேதணையாக இருந்தது. இதுகுறித்து விழுப்புரம் பேருந்து கோட்ட அதிகாரியிடம் கேட்டபோது பகலிலே 25க்கும் மேற்பட்ட பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயணிகளும், பேருந்து ஓட்டுனர்களும் காயம் அடைந்துள்ளனர். இரவில் பேருந்தை இயக்கினால் இன்னும் நிலமை மோசமாக இருக்கும். எனவே பேருந்தை இயக்கினால் பயணிகளுக்கும் பேருந்துக்கும் பாதுகாப்பு இல்லை. அதனால் தான் இரவு நேரத்தில் செல்லும் அனைத்து வண்டிகளையும் நிறுத்தியுள்ளோம் என்றார். குருவின் உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யும் வரை கடலூர், அரியலூர்,விழுப்புரம் மாவட்டங்கள் திக் திக் நிலமை தான் என்கிறார்கள் பேருந்து ஓட்டுனர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05-27/tears.jpg)