Advertisment

பத்து அரசு பேருந்துகள் ஜப்தி...அதிர்ச்சியான போக்குவரத்து அதிகாரிகள்!!

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தில் அரசு போக்குவரத்து பனிமனை அமைத்துள்ளது அராங்கம். அதற்கான இடத்தை விவசாயிகளிடம்மிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளது. அப்படி வாங்கிய இடத்திற்கு சரியான நஷ்டயீடு வழங்கவில்லையென விவசாயிகளின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

buses seized

வேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கில் வட்டியோடு சேர்த்து நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தொகை 1.75 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இப்படியொரு உத்தரவு வந்து 12 மாதங்களுக்கு மேலாகியும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ளனர் . நீதிமன்றம் நிலுவை தொகையை தராததால் வேலூர் மண்டல போக்குவரத்து துறைக்கு உரிய 10 பேருந்துகளை பறிமுதல் ( ஜப்தி ) செய்யச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினருடன் வேலூர் மத்திய பேருந்து நிலையத்துக்கு நவம்பர் 7ந்தேதி மதியம் வந்து 10 பேருந்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களீடம் ஒப்படைத்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் பணத்தை தந்துவிட்டு பேருந்துகளை மீட்டுக்கொள்ளலாம் எனச்சொல்லி அதற்கான ஆர்டரை தந்துவிட்டு சென்றுள்ளனர்.

பேருந்து நிலையத்தில்ஒரே நேரத்தில் பத்து பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தது அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது, போக்குவரத்து துறை ஊழியர்களும் என்ன செய்வது எனத்தெரியாமல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இதுப்பற்றி வேலூர் மண்டல அதிகாரிகள், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

bus Seized
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe