தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வணிக வளாகங்கள், பெரிய கோவில்களை திறக்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை 01-09-2020 (நாளை) முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வழக்கமாக பேருந்துகளை பராமரிப்பு மற்றும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை முதல் பேருந்துகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை பல்லவன் இல்லம் டிப்போவில் பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக இன்று நடைபெற்று வருகிறது.