தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள்இரண்டாவது நாளாகபோராட்டம் நடத்திவருகின்றனர். திருச்சியில் இன்று (26.02.2021) காலை 11 மணியளவில் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அமைச்சரைக் கண்டித்து கூட்டமைப்புத் தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டகண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு, திருச்சி மண்டலம் புறநகர் கிளை முன்பு இன்று நடைபெற்றது. இன்றும் குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே திருச்சி, கரூர் மண்டலங்களில் பேருந்துகள் இயங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.