style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஆத்தூர் பைபாஸ் ராமஸ் ஹோட்டல் அருகில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அப்போது ஆத்தூர் வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆத்தூர் பைபாஸ் அருகே விபத்து நடந்ததை அறிந்தவுடன் உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.
மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமைச்சர் வேலுமணி நேரடியாக இறங்கினார்.
ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனே வரவழைத்துவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவர்களிடம் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையை உடனே மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.