Advertisment

பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்!

Bus truck head on collision 3 victims of tragedy

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராசிபுரம் வழியாக நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் என்ற பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து வழக்கம் போல் நேற்று (22.11.2024) இரவு தனது பயண வழித்தடமான நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள மெட்டாலா கோரை ஆற்றுப் பகுதியில் வந்தது கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்பக்க திடீரென டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்திசையில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர் என 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும்,10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தகவல் அறிந்த அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவமனை வருகை தந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். அதோடு அவர்கள், மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தனர். தனியார் பேருந்து - லாரி, நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

lorry namakkal rasipuram
இதையும் படியுங்கள்
Subscribe