தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று (20.06.2021) தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வகை மூன்றில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தன. 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் பஸ் மற்றும் மெட்ரோ சேவை தொடங்கியுள்ளது.
வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு எவ்வித கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.