Advertisment

21 மாதங்களுக்குப் பிறகு துவங்கப்பட்ட பேருந்து சேவை!

Bus service started after 21 months

கடந்த 21 மாதங்களாக நோய்த்தொற்று காரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து பயணிகள் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாலக்காடு, திருச்சூர், கொச்சின், மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பயணிகள் பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

நோய்த்தொற்று காலத்தில் அதிகமான பயணிகள் ரயிலில் மட்டுமே பயணம் செய்த நிலையில் தற்போது பயணிகள் பேருந்து இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைவதாகத்தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும்போது, “பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் . கோவை கேரள எல்லையான வாலையார் பகுதிகளில் முகாம் அமைத்து அங்கு வரும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். RTPCRசான்றிதழ் வைத்திருக்க வேண்டும்” என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.

bus service Kerala Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe