Bus owner's house robbed by robbers!

Advertisment

தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி, ரொக்கத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் வசித்து வருபவர் ஜெயசந்திரன். இவர் தனியார் பேருந்து உரிமையாளர் ஆவர். இவர் குடும்பத்தினருடன் குருவாயூருக்கு இரண்டு நாட்கள் சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை மற்றும் ரொக்க பணம் ரூபாய் இரண்டு லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்த தகவலறிந்த, விருத்தாசலம் காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். அத்துடன், சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.