Bus-lorry clash near Ulundurpet

Advertisment

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்தது.

ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்ததால் இந்த பேருந்தில் பயணம் செய்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.