/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/BUS3234433.jpg)
அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து வாழப்பாடி புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையின் எதிரே வந்த கார் மீது மோதும் சூழல் ஏற்படவே, அதனை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தைத் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகவும் பயணிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டும், பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விபத்துக் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த 42 பயணிகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)