ttv

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அ.ம.மு.கவினர் வெடித்த சரவெடியால் அரசு பேருந்து கண்ணாடி உடைந்ததால் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் அணியினர் நில வேம்பு காசயம் கொடுக்கும் நிகழ்ச்சியில் வெடித்த 2000 வாலா சரவெடி அரசு பேருந்து கண்ணாடி மீது பட்டதில் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

ttv

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் அ.ம.மு.க சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், விருத்தாசலம் எம்.எல்.ஏவுமான விடி.கலைச்செல்வன் வரும்போது தொண்டர்கள் 2000 வாலா சரவெடி பட்டாசு வெடித்தனர்.

அப்போது சேலத்திலிருந்து கடலூர் செல்வதற்க்காக பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் வெடி பட்டு அரசு பேருந்து கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.