bus

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இருந்து திருநெல்வேலி செல்கிற அரசு பேருந்து குறைந்த அளவு பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் வழியாக சென்றது. இன்று மாலை 5 மணி அளவில் அந்தப் பேருந்து ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த கருங்குளம் அருகே வரும்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பேருந்தை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

Advertisment

இதில் அலறிய பயணிகளும், ஓட்டுநர், நடத்துநரும் பேருந்தை விட்டு வெளியேறினார்கள். பேருந்து முற்றிலும் தீயில் எரிந்தது. சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சப் டிவிஷன் போலீசார் விரைந்துள்ளனர். தீ வைத்த நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisment