
தமிழகத்தில் பேருந்து, பால், மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்துவந்த நிலையில் மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இருக்கலாம் என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சூசகமாக செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படுத்தி வந்தார். பால், பேருந்து, மின் கட்டணம் உயர இருப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த கே.என்.நேரு, ''கடந்த முப்பது நாற்பது ஆண்டுகாலமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று விலை ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் காலத்தில் எதுவுமே ஏறவில்லையா? எனவே இயற்கை அந்த நேரத்தில் என்ன முடிவெடுக்குமோ அதுதான். நமது முதல்வர் மக்கள் பாதிக்காத அளவிற்கு முடிவெடுப்பார்'' என கூறியிருந்தார்.

இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், 'தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆந்திரா, கேரள அரசு பேருந்துகளில் தொலைதூர பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதனை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகம் 48,500 கோடிரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது' என்றார். மேலும், தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வர் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)