
தென்காசி மாவட்டம் கடயம் அருகே பெண் பயணியை அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆபாசமாகத் திட்டியதோடு தாக்க முயன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடயம்-ஆலங்குளம் இடையே ஓடும் அரசுப் பேருந்தை ஓட்டுநர் முப்புடாதி முத்து என்பவர் கடந்த ஞாயிறு அன்று இயக்கியுள்ளார். அப்பொழுது குத்தபஞ்சான்விளக்குபகுதியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பேருந்தில் ஏறிய நிலையில், தனது மகள் வந்துகொண்டிருக்கிறார் எனவேசில வினாடிகள் காத்திருக்கும்படி ஓட்டுனரிடம் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த முப்புடாதி முத்து அந்தப் பெண் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் இது பெரும் வாக்குவாதமாகி,ஓட்டுநர் அந்தப் பெண் பயணியை ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசுகிறார்.இதனால் அந்தப் பயணியும் பதிலுக்குஓட்டுனரைஒருமையில் பேசுகிறார்.இந்நிலையில் ஆத்திரமடைந்த ஓட்டுநர் அந்தப் பெண் பயணியைத் தாக்கியுள்ளார்.இதுகுறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் சென்றநிலையில், போலீசார் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். ஆனால், பேருந்து ஓட்டுநர் பெண்ணை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெண் பயணியைத் தாக்கிய ஓட்டுனரை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)