Advertisment

"கொஞ்சம் பொறுங்க... ஓட்டுபோட்டு வருகிறேன்" - பயணிகள் அனுமதியோடு பேருந்தை ஓரங்கட்டிய ட்ரைவர்

Dharmapuri

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பலரும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்கும் சம்பவங்களும் தமிழகம் முழுவதும் நடந்துவருகின்றன.

Advertisment

இந்த நிலையில், பேருந்தை ஓட்டி வந்த ட்ரைவர் ஒருவர், பயணிகளின் அனுமதியோடு வாக்களிக்கச் சென்ற ருசிகர சம்பவம் ஒன்று தருமபுரி மாவட்டம் மல்லாபுரம் பகுதியில் நடந்துள்ளது. தருமபுரி மாவட்டம், மல்லாபுரம் 5ஆவது வார்டைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் பேருந்து ஓட்டுநரான இவர், காலக்கோட்டிலிருந்து சேலத்திற்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அப்போது மல்லாபுரம் வாக்குச்சாவடி அருகே பேருந்து வந்தபோது, பேருந்திலிருந்த பயணிகளிடம் அனுமதி வாங்கி, சாலையின் ஓரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு வாக்களிக்கச் சென்றுள்ளார். 15 நிமிடங்கள்வரை பயணிகள் பேருந்தில் காத்திருந்த நிலையில், வாக்களித்துவிட்டு வந்த ஸ்ரீதர், மீண்டும் பேருந்தை எடுத்துக்கொண்டு சேலம் நோக்கிப் புறப்பட்டார். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

dharmapuri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe