அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் கிராம மக்கள் அரசுப் பேருந்துக்கும் மற்றும் ஓட்டுநர் நடத்துனருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Advertisment

Advertisment

கரோனா ஊரடங்கால் பேருந்துகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. ஜூன் 1 முதல் அரசுப் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தில் அரசுப் பேருந்து சென்றது.

அப்போது பேருந்துக்கு வேப்பிலை மாலை அணிவித்தும் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி எடுத்தும் மற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர் கிராம மக்கள். இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு அரசுப் பேருந்துக்கு வரவேற்பு அளித்தனர்.