சென்னை எண்ணூரில் அரசு பேருந்து ஒன்றின் பின்புற நுழைவு வழியின் கதவு கழன்று விழும் நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எண்ணூரில் இருந்து பிராட்வே வரை செல்லும்4 என்ற எண் கொண்ட பேருந்தின் பின்பக்க நுழைவு வழியின் கண்ணாடிக் கதவு கழன்று விழும் நிலையில் இருந்தது. இருப்பினும் அலட்சியமாக அந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துரிதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேருந்தை சீரமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.