Advertisment

'ஓசின்னா சும்மா சும்மா பஸ்ல வருவியா' - மூதாட்டியை திட்டிய பேருந்து நடத்துநர் 

BUS conductor scolds old woman

'ஓசின்னா சும்மா சும்மா பஸ்ல வருவியா' என மூதாட்டி ஒருவரிடம் அரசுப் பேருந்து நடத்துநர் சண்டையிடும் வீடியோ காட்சிசமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Advertisment

தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34ஏ என்ற அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் அடிக்கடி பயணித்த நிலையில், 'ஓசின்னா சும்மா சும்மா பஸ்ல வருவியா' என நடத்துநர் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அதற்கு மூதாட்டி 'என்ன தம்பி இப்படி தரக்குறைவா பேசுறீங்க. சாமிக்கு மாலை போட்டு இருக்கீங்க. இப்படி பேசுறீங்க' எனத்தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிசமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

Thanjai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe