Advertisment

பணி நிரந்தரம் செய்யாததால் கருணைக் கொலை செய்ய வேண்டி சுவரொட்டிகள் ஒட்டிதால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகரை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் சதீஷ்குமார். இவர் தந்தை இறந்த பிறகு வாரிசு அடிப்படையில் கடந்த 2007 ஆம் ஆண்டு விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை ஒன்றில் நடத்துனராக பணியில் சேர்ந்துள்ளார்.

Advertisment

bus conductor Poster in cuddalore

இவர் கடந்த 20 வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமல், தினக்கூலியாக வேலை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு செல்லும் நாட்களை, விடுப்பு எடுத்துள்ளதாக பதிவேட்டில் குறித்துள்ளதை பற்றி பணிமனை மேலாளரிடம் முறையிட்டு மனு அளித்துள்ளார். பணி நிரந்தரம் செய்வதற்கான வேலை நாட்களை முடித்தும், உயர் அதிகாரிகள் பணி நிரந்தரம் வழங்காததால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த சதிஷ்குமார் விருத்தாச்சலம் நகரம் முழுவதும் தன்னை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisment

மேலும் நடந்த முடிந்த பாரளுமன்ற தேர்தலில் விருத்தாசலம் வருகை தந்த தமிழக முதல்வரிடம், பணி நிரந்தரம் வழங்க கோரி மனு அளித்தாக சுவரொட்டியில் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Cuddalore bus Poster
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe