மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்றுசாலையோர மரத்தில் மோதிய விபத்தில் 11 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற காரணமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவருக்கும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.