bus carrying college students was driving under influence of liquor

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி பாஷா (26). இவர் மேல்விஷாரம் பகுதியில் உள்ள அப்துல் ஹக்கீம் தனியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பாகாயம் நோக்கி பேருந்தை இயக்கியுள்ளார்.

Advertisment

பணியின் போது மது போதையில் இருந்த ஹாஜி பாஷா மாணவர்கள் அச்சப்படும் வகையில் அஜாக்கிரதையாக சாலையில் அங்குமிங்கும் ஆட்டியபடி பேருந்து ஓட்டியுள்ளார். சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு வந்துள்ளனர். பின்னர் பேருந்தில் பயணித்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியதைத்தொடர்ந்து, வேலூர் கோட்டை எதிரே உள்ள தெற்கு காவல் நிலைய பகுதியில் ஒரு மாணவனின் பெற்றோர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

Advertisment

பின்னர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த தெற்கு காவல் நிலைய போலீசார் மது போதையில் பேருந்து இயக்கிய குற்றத்திற்காக சுமார் 15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தை ஓட்டுநர் மது போதையில் இயக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.