அரசு பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் பின் சக்கரஅச்சு முறிந்து கழன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து வடசேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற அச்சு உடைந்து ஒரு சக்கரம் முறிந்து சாலையிலேயே கவிழ்ந்தது. உடனடியாக பேருந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்து குறைவான வேகத்தில் இயக்கப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தற்பொழுது பேருந்து அச்சு முறிந்து சாலையில் நிற்கும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.