Advertisment

பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து; வெளியான சிசிடிவி காட்சி

 Bus auto head on collision accident; CCTV footage released

Advertisment

திண்டுக்கல்லில் இரவு நேரத்தில் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே முகம் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கடந்த 15 ஆம் தேதி இரவு ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து பலியானார். நாகராஜ் முகம் நசுங்கிய நிலையில்ஆட்டோவில் கிடந்தததைக் கண்டு அவரது உறவினர்கள் கதறித் துடித்தனர். அதேபோல் அந்த ஆட்டோவில் பயணித்த நாகராஜின் நண்பர் சந்தோஷ் என்பவர்படுகாயத்துடன் மீட்கப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய தனியார் நூற்பாலை பேருந்தின்ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பானதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe