/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/car43434.jpg)
பேருந்து மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது காரியத்திற்காக உறவினர்கள் 11 பேர் ஆம்னி காரில் சென்றுள்ளனர். ஒட்டம்பாறை மேம்பாலம் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி காரை ஒட்டிய ராஜேஷ் மற்றும் பயணம் செய்த சந்தியா, சரண்யா, ரம்யா, சுகன்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி தன்ஷிகா என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், இரவில் கண் விழிப்பதற்கு டீ குடித்து விட்டு வருவதாக சென்றதாகவும், அப்போது விபத்தில் சிக்கியதாகவும் அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)