Advertisment

முன்னால் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து! 

bus and lorry incident trichy to chennai highways

லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் உயிரிழந்தனர்.

Advertisment

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து பெரம்பலூர் சின்னாறு அருகே முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

பேருந்தில் பயணம் செய்த 15- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டுஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

bus incident lorry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe