புதுக்கோட்டையில் இருந்து கும்மங்குளம் வழியாக ஆலங்குடி செல்லும் ஆர். எஸ். டி. தனியார் பேருந்து வழக்கம் போல இன்று மாலை புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு 10 கி. மீ. சென்ற நிலையில் மணியம்பள்ளம் என்ற கிராமம் அருகே தைல மரக்காட்டில் நேரான சாலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்த அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேரான சாலையில் எப்படி பேருந்து கவிழ்ந்தது என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.