b

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், ஓட்டுநராகப் பணி செய்து வருபவர் ஜி.சக்திவேல் ( 42). பணி எண்.10 DR 068 ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வேலை செய்த நிலையில், வெள்ளிக்கிழமை பகல் 12 மணி வாக்கில், பேராவூரணி பணிமனையில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கிளை மேலாளர் ரமேஷ், டூட்டி கிளெர்க் சரவணன் இருவரும், உடனே வேறு ஒரு பேருந்தில் ஓட்டுநர் பணிக்கு செல்லுமாறு வற்புறுத்தி உள்ளனர்.

Advertisment

இரண்டு நாட்களாக ஓய்வின்றி பணி செய்வதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சோர்வடைந்து விட்டதாகவும், பேருந்தை இயக்க உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றும் சக்திவேல் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த மேலாளர் ரமேஷ், டூட்டி கிளெர்க் சரவணன் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்வோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் மன வேதனை அடைந்த ஓட்டுநர் சக்திவேல் பணிமனையிலேயே, மண்ணெண்ணையை குடித்தும், உடலில் ஊற்றியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டுநர் சக்திவேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தற்கொலைக்கு முயன்ற சக்திவேலின் மனைவி சந்திரகலா கூறுகையில், '' என் கணவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கிளை மேலாளர் ரமேஷ், டூட்டி கிளெர்க் சரவணன் இருவருமே பொறுப்பு. கடந்த சில மாதங்களாகவே இருவரும் என் கணவரை துன்புறுத்தி வந்தனர்'' என்றார்.

பஸ் டெப்போ ஊழியர்கள் தரப்பிலும் ஓய்வின்றி பணி தரப்படுவதாகவும், பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். ஏராளமான சக தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் சக்திவேலை சந்தித்து, அவரது மனைவியிடம் ஆறுதல் கூறினர். கிளை மேலாளர் ரமேஷ்.. அவருக்கு நெருக்கடி ஏதும் தரவில்லை'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார். உயர் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.