Advertisment

''என்னையும் அங்கேயே அடக்கம் செய்துடுங்க'' - வீடியோ வெளியிட்டு சிறுவன் தற்கொலை

Advertisment

தென்காசியில் 16 வயது பள்ளி மாணவன் வீடியோ வெளியிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுவன் வாட்ஸ் அப்பில் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில் தன்னுடைய காதலி இறந்த சோகத்தில் நானும் தற்கொலை செய்துகொள்ள இருக்கிறேன். எனது காதலியை எங்கு புதைத்தீர்களோ அங்கேயே என்னையும் அடக்கம் செய்துவிடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துவிட்டு தூக்கிட்டு இறந்துள்ளான். சிறுவன் தூக்கிட்டு இறந்ததை போலீசாருக்குத்தெரிவிக்காமல் சிறுவனின் பெற்றோர் உடலைஎரிக்க முற்பட்ட நிலையில், தேவர்குளம் காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இதேபோல் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவனும், 10ஆம் வகுப்பு மாணவியும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.

school love thenkasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe