/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a24_1.jpg)
சென்னையை அடுத்த ஆவடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இன்று விடுமுறை என்பதால் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு ஹூண்டாய் காரில் சென்றுள்ளார்.அப்பொழுது காரின் முன் பகுதியில் கரும்புகை ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அனீஸ் காரை விட்டு இறங்கிய நிலையில் கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்ததது. நீரை பீச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான சாலையில் கார் பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)