Skip to main content

என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி பாஜக நிர்வாகி கைவரிசை

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

burma bazaar issue in chennai six peoples surrender

 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் சென்னையில்  உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் இவரது வீட்டிற்கும், கடைக்கும் சென்ற 6 மர்ம நபர்கள் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி அவரது கடையிலும் வீட்டிலும் என 20 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

தனது வீட்டிற்கும், கடைக்கும் வந்தவர்கள் உண்மையான என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பதும், தான் பணத்தை இழந்ததை அறிந்த அப்துல்லா இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து காவல் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்தனர். இவர்களில் பாஜகவை சேர்ந்த வடசென்னை பகுதி நிர்வாகி வேலு என்கிற வேங்கை மாறன் என்பதும் அவரது கூட்டாளிகளான ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக் ஆகிய ஆறு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இவ்வழக்கு தொடர்பான முழு விவரம் தெரிய வரும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்