Advertisment

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளை; 4 பேர் கைது

Burglary of a locked house; 4 arrested

கோப்புப்படம்

Advertisment

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பூட்டப்பட்டு இருக்கும் வீடுகளை குறிவைத்து சில மர்ம நபர்கள் வீட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த பகுதியில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதுகுறித்து திருநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நான்கு பேரை பிடித்து போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். நான்கு பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் பல நகைகளை கண்மாய் பகுதியில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கண்மாயில்புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 சவரன் நகை மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

madurai police Robbery Thiruparankundram
இதையும் படியுங்கள்
Subscribe