Burglary at the home of a spiritual tourist

Advertisment

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பாக்கர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் அசோக் குமார்(40). இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அசோக் குமார் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆம் தேதி காவடி எடுத்துக்கொண்டு திருத்தணிக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து அறுபடை வீடான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்றார்.

இந்த நிலையில், ஆலயங்களில் வேண்டுதலை முடித்துக்கொண்டு, அசோக் குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான பேர்ணாம்பட்டுக்கு திரும்பியுள்ளார். காலை வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் நகைகள், ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அசோக் குமார் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.