Advertisment

மருத்துவமனைக்கு சென்ற கேப்பில் கைவரிசை; இருவர் கைது

Burglary by breaking the lock of the house; Two arrested

Advertisment

வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுகுணா இப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுகுணா உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 22 கிராம் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.

மேலும் சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த குடியாத்தம் கிராமிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குடியாத்தம் போலீசார் மோடி குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து குடியாத்தம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (வயது22) மருதுபாண்டி(வயது32) என்பது தெரியவந்தது.

Advertisment

இவர்கள் இருவரும் சுகுணா வீட்டின் பூட்டை உடைத்து 22 கிராம் தங்க நகை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Theft
இதையும் படியுங்கள்
Subscribe