இலங்கையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உருவானது 'புரெவி' புயல்!

g

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 400 கி.மீதொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'புரெவி' புயலாகத் தற்போது வலுப்பெற்றுள்ளது. நாளை மாலை இலங்கையின் திரிகோணமலைப் பகுதியைப் புயல் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, டிச.4 ஆம் தேதி அதிகாலை 'கன்னியாகுமரி - பாம்பன்' இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக கேரள அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

cyclone
இதையும் படியுங்கள்
Subscribe