publive-image

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரியை உயர்த்திய மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன.

Advertisment

publive-image

தொழில் பின்னடைவு, பொருளாதார நசிவு, வருவாய் இழப்பு என தமிழகம் தத்தளித்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்கள் மீது ஏற்றிய இந்தப் பெருஞ்சுமை உடனடியாக நீக்கப்பட வேண்டும். மக்களின் வாட்டம் போக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.