திருச்சி அம்மாமண்டபம் மாம்பழச்சாலை பகுதியில் மொத்தமாக போதைப்பொருட்கள் வாங்கி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் திருவரங்கம் போலீஸ் உதவியுடன் சோதனையிட்டபோது மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் வாங்கி வைத்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. குறிப்பாக,கூலிப், கான்ஸ், விமல் உள்ளிட்ட ஆறு வகையான போதைப்பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அம்மாமண்டபத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.