nn

Advertisment

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபரால் ஆபாச மிரட்டலுக்கு உள்ளான கல்லூரி மாணவி வீட்டில் கதவை தாழிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து மாலை வீடு திரும்பிய மாணவி வீட்டின் தனி அறைக்கு சென்று தாழிட்டு கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மாணவியின் கல்லூரி நண்பர்கள் பலர் பதறியடித்தபடி மாணவியின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் ஏன் இவ்வாறு பதறியடித்து ஓடி வந்தீர்கள் என கேட்டதற்கு சம்பந்தப்பட்ட மாணவி செல்போனில் தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்என்ற அதிர்ச்சி தகவலை பெற்றோருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக மாணவி தாழிட்டுக் கொண்ட தனி அறையை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த பொழுது மாணவி தூக்கில் தொங்கியபடி கிடந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன காரணத்திற்காக மாணவி தூக்கிலிட்டுக் கொண்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையில்சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கமான மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தகாத மெசேஜ்களை அனுப்பி வந்தது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் மாணவியுடன் முரண்பட்ட அந்த நபர் மாணவியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் பயத்தில் இருந்த 17 வயது மாணவி கல்லூரி முடிந்த மாலையே வீட்டிற்கு வந்ததும் தற்கொலை செய்து கொள்ள இருப்பதை மற்ற மாணவர்களுக்கு தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவிக்கு மிரட்டல் விட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.