இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானலில் நடைபெற்ற 57 வது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதிறந்து வைத்தார். இந்த மலர்கண்காட்சி விழாவிற்கு பக்கத்து மாவட்டமான தேனி மாவட்டத்தை சேர்ந்தவராகதுணை முதல்வர் ஒபிஎஸ் இருந்தும் கூட ஒபிஎஸ்சை இந்த விழாவுக்கு இபிஎஸ் அழைக்காமல் தான்மட்டும் கலந்து கொண்டார். இது ஒபிஎஸ்க்கே வருத்தம்தர, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடையஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்ததுடன்மட்டும்மல்லாமல் தேனி மாவட்டத்தில் இருந்து கட்சி பொறுப்பாளர்கள் யாரும் இந்த விழாவில் கலந்துகொள்ள வரவில்லை.
இந்த விஷயம் சென்னையில் இருந்த ஒபிஎஸ் காதுக்கு எட்டியதின் பேரில் அதிர்ச்சி அடைந்த ஒபிஎஸ் நேற்று மாலையே தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்தார். உடனே தனது ஆதரவாளரான தேனி மாவட்ட செயலாளர்சையதுகானை தொடர்புகொண்டுகொடைக்கானலில் இருந்து சென்னைசெல்ல இருக்கும் முதல்வருக்கு மாவட்ட எல்லையானகாட்டுரோட்டில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கவேண்டும் ஆகையால்மாவட்டத்தில் உள்ள கட்சிபொறுப்பாளர்களை பெரும் திரளாக அழைத்து வாருங்கள் என உத்திரவிட்டார்.
அதன் அடிப்படையில்தான் இன்று காலையில் தேனி மாவட்டத்தில்இருந்து கட்சி பொறுப்பாளர்கள்பெரும் திரளாக வந்து முதல்வரை வரவேற்க காட்டுரோட்டுக்கு வந்தனர்.
அதுபோல மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்,எஸ்.பி பாஸ்கரன் உள்பட மாவட்டஅதிகாரிகளும் வந்தனர். அதன்பின் ஒபிஎஸ்சும் அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் வந்தும் கோடையில் இருந்துகாட்ரோடு வழியாக சென்னை செல்ல வந்த முதல்வர்இபிஎஸ்சை துணை முதல்வர் ஒபிஎஸ் வரவேற்று அனுப்பிவைத்தார்.
இந்த கோடை விழாவிற்கு ஒபிஎஸ்சைஅழைக்கவில்லை என்றாலும்கூட முதல்வர் என்ற முறையில் கட்சி பொறுப்பாளர்களை திரட்டி வரவேற்புகொடுத்தது ஒபிஎஸ்சின்பெரும் தன்மையை காட்டிஇருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது.