Advertisment

நிழற்குடை திறப்பு..! சேர்மன் பெயர் இல்லை..! காரணம் தி.மு.க.வா..? 

 reason

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் குன்னூர் ஊராட்சி முதுவளர்குடி கிராமத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதியின் நிதியில் (2019-2020) ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

திறப்பு விழா நடந்த நிழற்குடையில் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, ஒன்றியகவுன்சிலர் ராஜேஸ்வரி நரேந்திரஜோதி, ஊராட்சிமன்றதலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் சுப்பு ஆகியோர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றியக்குழு தலைவர் திமுகவை சேர்ந்த உமாதேவி பெயர் இல்லை. ஒன்றிக்குழு உறுப்பினர் பெயர் எழுதப்பட்ட நிலையில் தலைவர் பெயர் மட்டும் ஏன் விடுபட்டது? தலைவர் உமாதேவி தி.மு.க என்பதால் பெயரை எழுதவில்லையா? அல்லது பட்டியலினத்தை சேர்ந்தவர்என்பதாலா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தீண்டாமையாக நினைத்து சேர்மன் பெயர் இடம்பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dddd

Advertisment

இதுகுறித்து சேர்மன் உமாதேவி (திமுக) கூறும்போது, அது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட நிழற்குடை என்பதால் என் பெயர் எழுதாமல் விட்டிருக்கலாம். தீண்டாமை என்று சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறார்களே? என்ன நினைத்து பெயர் எழுதாமல் விட்டார்களோ? ஆனால் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை. எம்.எல்.ஏ. நிதி என்பதால் விடுபட்டுள்ளதாகவே நினைக்கிறேன் என்றார்.

pudhukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe