A building collapsed in the blink of an eye; Shocking CCTV footage

மதுரையில் கட்டடம் கட்டிக் கொண்டிருந்த பொழுது பணியாளர்கள் மீது கட்டடத்தின் மாடிப்படி அமைப்பு அப்படியே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாநகராட்சி 20 ஆவது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1வது தெரு பகுதியில் வசித்து வருபவர் தமிழ் முரசு. இவர் கான்ட்ராக்டர்ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக விட்டிருந்தார். அதன்படி வீடு கட்டி வந்த நிலையில் 5 கட்டடத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.இந்நிலையில் இன்று கட்டடப் பணியின் பொழுது மாடிப்படி அமைப்பு எதிர்பாராவிதமாக முழுவதுமாக சரிந்து பணியாளர்கள் மேலே விழுந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த மூக்காயி என்ற 52 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நொண்டி சாமி, கட்டையன், ஜோதி ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். காயமடைந்த அனைவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பதற வைக்கும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment