Advertisment

பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்; திண்டுக்கல்லில் தள்ளுமுள்ளு

budget copy issue in dindigul police involved 

Advertisment

ஒன்றிய பாஜக அரசின்பட்ஜெட்டைகண்டித்துதிண்டுக்கல்லில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில்ஈடுபட்ட போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சமீபத்தில் ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்த 2023 ஆம் ஆண்டுக்கானபட்ஜெட்டில் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கான உணவு மானியத் தொகை ரூ. ஒரு லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உர மானியம் 50 ஆயிரம் கோடி வெட்டப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் 29 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தில் இருந்து பல லட்சம் விவசாயிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டிக்கும் விதமாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களால்நாடு முழுவதும் நடத்தப்பட்டுவருகிற பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் திண்டுக்கல்லிலும் நடைபெற்றது.

தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக இன்று நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி முன்னிலை வகித்தார். சிபிஎம் ஒன்றியசெயலாளர் சரத்குமார்,விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி, அம்மையப்பன்,ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சரத்குமார்,சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகம்,பாக்கியம் ஆகியோர் இந்த போராட்டத்தில் நகல் எரிக்க முற்பட்ட போது போலீசார் அதனைத்தடுக்க முயன்றதால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

police budget
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe