பி.எஸ்.என்.எல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்! 

BSNL Union struggle in trichy

பி.எஸ்.என்.எல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில், திருச்சி பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக, நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவிகித ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும். 7.8.2022 அன்று நடைபெற உள்ள ஜே.டி.ஓ இலாகா தேர்வும், இதர இலாகா தேர்வுகளும் 31.1.2020 அன்று உள்ள காலிப்பணி இடங்களை வைத்தே நடத்தப்பட வேண்டும். பரிவு அடிப்படையில் பணி வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பேக்லாக் காலி பணியிடங்களை, காலதாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு எ.ஐ.ஜி.இ.டி.ஓ.ஏ செந்தில்குமார் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல் இயூ அஸ்லாம் பாஷா துவக்க உரையாற்றினார். இதில் ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ. சசிக்குமார், அசோக்குமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe